
ஓர் பெரிய பாலைவனத்தை நடந்தே கடக்க துடிக்கும் எறும்பை போல
இப்பேரண்டத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கும் சிறு மனிதர்கள் ...
ஓர் விஞ்ஞானியின் வேடிக்கை ...
பேரண்டம் ஒன்றல்ல இரண்டு என்றார் ...
இன்னும் ஒரு அண்டம் என்றால் இன்னும் ஒரு சூரியன்,
இன்னும் ஒரு சூரியன் என்றால் இன்னும் ஒரு சந்திரன்
இன்னும் ஒரு சந்திரன் என்றால், இன்னும் ஒரு வான்,
இப்படி இன்னும் சில கேள்விகளை தொடுத்து கொண்டே இருந்தால்
கடைசியில் அது தொட்டு நிற்கும் இடம் ... இன்னும் ஒரு நானா ???
இரு பூமி என்றால் அதில் இருக்கும் பொதுவான பல விஷயம் ...
அப்படியென்றால் நன்மையும் நேர்மையும் உண்மையும் வன்மையும் அதற்கும் சமமா ??
போதுமடா சாமி ...
சாமி என்றவுடன் தான் நினைவுக்கு வருகிறது,
கடவுள் யார் என்ற கேள்விக்கே முழு விடை கிடைக்கவில்லை
கடவுள் அவனா அவளா அதுவா என்றும் புரியவில்லை
இதை பற்றி வாதாட விரும்பாத சிலர்
கடவுள் ஒன்றே என சொல்லி குழப்பத்தை முடிப்பதிலேயே குறியாய் இருக்கின்றனர் ...
அந்த வாதாட விரும்பா குழுவில் நானும் ஒருவன் ...
அதனால் இந்த குழப்பத்திற்கு ஒரு முடிவு கட்ட
கடவுளும் அண்டமும் ஒன்றே என கண்மூடித்தனமாய் நம்புவோமாக !!!
--- கார்த்திக் ---

- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact